குழந்தைகள் மீதான உளவியல் ரீதியான துன்புறுத்தல் என்பது ஒரு குழந்தையின் நலனில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அதனை உணர்வு அல்லது மன ரீதியாக தவறாக கையாளுதலை குறிக்கும்.
ஒரு குழந்தையின் சுயமதிப்பு, தன்னம்பிக்கை, உளவியல் வளர்ச்சி ஆகியவற்றை பலவீனப்படுத்தும் நடத்தைகளையும் செயல்பாடுகளையும் இது உள்ளடக்குகிறது.
உளவியல் ரீதியான துன்புறுத்தலின் சில எடுத்துக்காட்டுகள்.
1. வார்த்தை அல்லது உணர்வு ரீதியான இழிவுபடுத்துதல்
2. நிராகரிப்பும் புறக்கணிப்பும்.
3. தொடர்ச்சியான விமர்சனம்.
4. தனிமைப்படுத்துதலும் அடைத்து வைத்தலும்.
5. தவறாக கையாளுதலும் சுரண்டலும்.
6. பயமுறுத்துதல் அல்லது மிரட்டுதல்.
7. அன்பையும் பாசத்தையும் தர மறுத்தல்.
உளவியல் ரீதியான துன்புறுத்தல் என்பது ஒரு குழந்தையின் மன நலன், உணர்வு ரீதியான நல்வாழ்வு, ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றில் கடுமையான தீய விளைவுகளை ஏற்படுத்தும்.
தாழ்வான சுய கௌரவம், மன அழுத்தம், பதற்றம் சமூக ரீதியான பின்வாங்கல்,உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் சிக்கல்கள், நடத்த சார் பிரச்சனைகள்,கல்விசார் சிக்கல்கள் ஆகியவற்றோடு நீண்டகால உளவியல் சீறு விளைவுகளுக்கும் கூட வழிவகுக்கும்.
தீர்வு முறைகள்:
ஒரு குழந்தை உளவியல் ரீதியான துன்புறுத்தலை எதிர்கொள்வதாக நீங்கள் சந்தேகித்தீர்கள் என்றால் உரிய குழந்தை பாதுகாப்பு அதிகாரிகளிடம் அது குறித்து புகார் அளிப்பது அல்லது ஆலோசகர்கள், மனநல மருத்துவர்கள், சமூகப் பணியாளர்கள் உள்ளிட்டவரிடமிருந்து தொழில் முறை ரீதியான உதவியை நாடுவது மிகவும் முக்கியம்.
சிறப்பான தகவல். வாழ்த்துக்கள்
ReplyDelete