Wednesday, 30 April 2025

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தமிழ்நாட்டில் பல்வேறு வடிவங்களும் போக்குகளும்

 உடல்ரீதியான வன்முறை:

    1.உடல்ரீதியான வன்முறையின் வடிவங்கள் :

                       அடித்தல், அறைதல், மிதித்தல், குத்துதல்,உலுக்குதல், சவுக்கால் அடித்தல்,  

2. உடல் ரீதியான வன்முறையின் இடங்கள் :

                  வீடு, பள்ளி,நிறுவனங்கள், சமூகம்.

3. விளைவுகளும் தாக்கமும்:

                                                       உடலில் காயங்கள்,வலி, துன்புறுத்தல், அதோடு உணர்வு ரிதியான, உளவியல் ரீதியான வேதனை ஆகியவற்றை விளைவிக்க கூடும்.

 4.உடல் ரீதியான வன்முறைக்குப் பங்களிக்கும் காரணிகள்:

                                                   தலைமுறைகளாகத் தொடரும் வன்முறை வடிவங்கள், உடல்சார் தண்டனையை மன்னிக்கும் பண்பாட்டு நம்பிக்கைகள்,குழந்தை வளர்ப்பு திறன்களின் போதாமை, குடும்பத்துக்குள் நிலவும் அழுத்தங்கள், போதைப் பொருள் பயன்பாடு வன்முறைக்கான சமூக ரீதியான ஏற்பு.

 5.சட்ட ரீதியானதும் பாதுகாப்புக்கானதுமான நடவடிக்கைகள் :

 இந்தியாவில் சிறார் நீதி சட்டம் 2015, குழந்தைகளை உடல் சார்ந்து தண்டிப்பதையும் உடல் ரீதியான துன்புறுத்தலையும் தடை செய்கின்றது. இந்தச் சட்டங்கள் அமலாக்கமும் இவை குறித்த விழிப்புணர்வும் இடங்களுக்கேற்ப வேறுபடலாம். குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்புக்களுக்கு வலுவூட்டி வன்முறையை நிகழ்த்தியவர்கள் அதற்கு பதில் அளிப்பதை உறுதி செய்வதற்கான தொடர் முயற்சிகள் தேவைப்படுகின்றன.


                                                 


             

No comments:

Post a Comment

குழந்தைகள் போதை மருந்துகளை சார்ந்து இருப்பது / அடிமையாவது.

இந்தியாவில் குழந்தைகள் போதை மருந்தை சார்ந்து இருப்பது என்பது சமீப காலங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு தீவிரமான பிரச்சனையாகும்.  இந...