Friday, 18 April 2025

'குழந்தை உரிமைகள்' என்கிற கருத்தாக்கம்

குழந்தை என்றால் யார்?

 குழந்தை என்றால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு குறைவாக இருக்கிற அல்லது வயது வந்தோர் என்ற கருதத்தக்க வயதை இன்னமும் அடையாத ஒரு இளம் மனிதர் (இளைஞர்) என்பது பொதுவான வரையறை.


 ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையின் படி, 18 வயதிற்கு உட்பட்ட எந்த ஒரு தனிநபரும் குழந்தை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.


 வரலாற்று ரீதியாக குழந்தைகள் நடத்தப்படும் முறை:

 பண்டைய நாகரிகங்கள் எப்போதும் குழந்தைகளை சமூகத்தின் மதிப்புமிக்கஉறுப்பினர்களாகவும் எதிர்காலத்துக்கு பங்களிப்பவர்களாகவும் பார்த்தன.  


(உதாரணத்திற்கு), பண்டைய ரோமாபுரியில்,குழந்தைகள் அவர்களின் அப்பாக்களின் சொத்தாக கருதப்பட்டனர், அவர்களின் நலன் குடும்பத்தின் முதன்மை பொறுப்பாக இருந்தது.                                    

பண்டைய கிரேக்க நாகரிகத்தில்,கல்வியும் உடற்பயிற்சியும் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் மிக முக்கியமானதாகவும் மதிப்பு வாய்ந்ததாகவும் கருதப்பட்டது.


 ஐரோப்பாவில் இடைக்காலத்தில், குழந்தைகள் பொதுவாக குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு  பங்களிப்பார்கள் என்று   எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் பெரியவர்களின் சிறிய நகல்களாக பார்க்கப்பட்டனர். அவர்கள் பெரும்பாலும் சிறு வயதிலிருந்தே வேலை செய்ய வேண்டியது இருந்தது. பெரியவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு அல்லது உரிமைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை.


'குழந்தை உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை' 1989 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. வாழ்வதற்கான உரிமை,ஆரோக்கியமாக வாழ்வதற்கான உரிமை,கல்வி உரிமை,  தீங்கிழைத்தலுக்கும் சுரண்டப்படுவதற்கும் ஆட்படாமல் இருப்பதற்கான உரிமை உள்ளிட்ட குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகளை கோடிட்டுக்காட்டியது.


 குழந்தைகள் பற்றிய புரிதல்களும்   புனைவுகளும் :

 குழந்தைகள் தொடர்புடைய பொதுவான சில பார்வைகளும் கட்டுக்கதைகளும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


1. குழந்தைகள் ஏதும் அறியாதவர்கள்.


2. குழந்தைகள் எளிதில் நொறுங்கி போவார்கள்.


3. குழந்தைகள் வெள்ளை பேப்பர்கள்.


4. குழந்தைகள் இயல்பாகவே கீழ்ப்படிந்து நடப்பார்கள்.


5. எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள்.


6. குழந்தைகள் பெரியவர்களின் அன்பை தவறாக பயன்படுத்துபவர்கள்.


7. பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கான ஒட்டுமொத்த பொறுப்பாளர்கள்.


 மேலே சொன்ன உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் விமர்சனம் மனப்பான்மையுடன் அணுக வேண்டும்.


 

1 comment:

  1. பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

குழந்தைகள் போதை மருந்துகளை சார்ந்து இருப்பது / அடிமையாவது.

இந்தியாவில் குழந்தைகள் போதை மருந்தை சார்ந்து இருப்பது என்பது சமீப காலங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு தீவிரமான பிரச்சனையாகும்.  இந...