Monday, 5 May 2025

பாலியல்சுரண்டலும் தீங்கிழைத்தாலும்

    குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் தீங்கிழைத்தல் ஆகியவை குழந்தைகளைப் பாலியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தும் மிகுந்த கவலைக்குரிய சட்ட விரோத செயல்பாடுகளாகும்.

    குழந்தைகளின் உடல்,உணர்வு மற்றும் உளவியல் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தீங்கை விளைவிக்கும். இது பல்வேறு விதமான தீங்கிழைத்தல்களை உள்ளடக்கியது.                         பின்வருவனவற்றுள் சில :

1. குழந்தைகளின் பாலியல் ரீதியான படங்கள்.

2. பாலியல் நோக்கத்துக்காக  குழந்தையைக் கடத்துதல்.

3. பாலியல் சுரண்டல் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்துவது

4. இணையவழி சுரண்டல்.

5. குழந்தைக்கு பாலியல் ரீதியாக  தீங்கிழைத்தல்

6. குழந்தையை பாலியலுக்குத் தயார்படுத்துதல்.

7. குழந்தை பாலியல் சுரண்டல் சாதனங்கள்.

    குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டலும் தீங்கிழைத்தல்களும் குற்றங்கள்.இவை மனித உரிமை மீறல்களும் கூட என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.        

      பாதிக்கப்படும் குழந்தைகள் அதனால் உடல் காயங்கள் உளவியல் வதை,பாலியல் வழியாகப் பரவும் தொற்றுக்கள், தேவையற்ற கர்ப்பம், சமூகத்தின் அவமதிப்பு, ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக் கொள்வதில் சிக்கல்கள் என கடுமையாகவும் நீண்ட காலத்துக்கு நீடிப்பவையுமான  விளைவுகளை எதிர்கொள்கின்றன.


No comments:

Post a Comment

குழந்தைகள் போதை மருந்துகளை சார்ந்து இருப்பது / அடிமையாவது.

இந்தியாவில் குழந்தைகள் போதை மருந்தை சார்ந்து இருப்பது என்பது சமீப காலங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு தீவிரமான பிரச்சனையாகும்.  இந...