Wednesday, 7 May 2025

குழந்தைகள் போதை மருந்துகளை சார்ந்து இருப்பது / அடிமையாவது.

இந்தியாவில் குழந்தைகள் போதை மருந்தை சார்ந்து இருப்பது என்பது சமீப காலங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு தீவிரமான பிரச்சனையாகும்.

 இந்தியாவில் உள்ள குழந்தைகள் பல்வேறு சமூகப் பொருளாதார காரணிகளால் போதை பழக்கத்துக்கு ஆட்படுகிறார்கள், போதை மருந்துகளை சார்ந்து இருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

 இந்தியாவில் குழந்தைகள் போதை மருந்துகளை சார்ந்து இருப்பதற்கு பல்வேறு காரணிகள் பங்காற்றுகின்றன. வறுமை,கல்வி அறிவு இல்லாமை, வேலையில்லா திண்டாட்டம், சம வயதுடைய நண்பர்களின் அழுத்தம், குடும்பம் சீர்குலைவது,வன்முறைக்கும் மனம் சார்ந்த அதிர்ச்சிக்கும் ஆளாவது, சில பகுதிகளில் போதைப் பொருட்கள் எளிதில் கிடைப்பது  ஆகியவற்றை உள்ளடக்கியது.

 மன அழுத்தம் அல்லது உணர்வு ரீதியான சிக்கல்களை சமாளிக்க அவற்றிலிருந்து தப்பிக்க   அல்லது ஆர்வத்தின் காரணமாக குழந்தைகள் போதைப்பொருளை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்தி அதற்கு அடிமையாகலாம்.

 இந்தியாவில் குழந்தைகள் மத்தியில் தவறாகப் பயன்படுத்தப்படும் போதை பொருட்கள் :

1.மது 

2. புகையிலை 

3. மோந்துபார்த்து அதன் மூலம் போதையை உள்ளிழுக்க பயன்படுத்தும் பொருட்கள் (  பசை, பெயிண்டை திரவமாக்க பயன்படுத்தப்படும் தின்னர் எனப்படும் ஒருவகை வேதி இயல் பொருள் போன்றவை )

4. கஞ்சா

5. ஓபியாய்டுகள் 


1.மது :

         ( A)குழந்தைகள் மதுவை தவறாகப் பயன்படுத்துவது கவலைகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.

(B)  சிறு வயதிலேயே மது  அருந்துவதால் அவர்கள் எல்லாவற்றுக்கும் அடுத்தவரை சார்ந்துஇருக்கும் நிலைக்கு த ள்ளப்படும் அபாயம் உள்ளது.

(C) சிறுவயதிலேயே மது அருந்துவதால் பல விஷயங்களில் பலவீனமான முடிவுகளை எடுப்பது உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை சந்திப்பது அபாயகரமான நடத்தைக்கு  உள்ளாவது ஆகிய பிரச்சனைகளை குழந்தைகள் சந்திப்பார்கள்.


2. புகையிலை:

                            

                               (A)குழந்தைகள் சிகரெட் புகைப்பது   அல்லது பிற புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவது என்பது அவர்களிடையே போதைப் பொருள் சார்பு நிலை இருப்பதன் இன்னொரு வடிவம்.

                                  (B) நிகோடினுக்கு அடிமையாகவது தீவிரமான ஆரோக்கியம் சார்ந்த பின் விளைவுகளைக் கொண்டு வரும், சுவாச பிரச்சனைகள்   புற்றுநோய்,புகையிலை தொடர்பான பிற நோய்கள் வரும் அபாயம் உள்ளது.

3. உள்ளிருக்கும் பொருட்கள் :

                    போதையை உண்டாக்க முகர்ந்து அல்லது சுவாசம் வழியாக உடலுக்குள் செல்லும் பொருட்கள் உள்ளிருக்கும் பொருட்கள் ஆகும்.

(A) உதாரணங்கள்:

                     பசை, பெயிண்டை திரவமாக பயன்படும் தின்னர்கள், பெட்ரோல், ஏரோ சல்,ஸ்பிரேக்கள் மற்றும் வீடு சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திரவங்கள் போன்ற ஆவியாகும் கரைப்பான்கள் ஆகியவை போதைக்காக உள்ளிழுக்கப்படும் சில பொருட்கள்.

  (B)பாதிக்கப்படும் உறுப்புக்கள் :

                        மூளை, கல்லீரல், சிறுநீரகங்கள், மற்றும் பிற உறுப்புக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

4. கஞ்சா:

                பொதுவாக மரிசுவானா அல்லது களை என்று அழைக்கப்படும் கஞ்சா, குழந்தைகள் தவறாக பயன்படுத்தக்கூடிய மற்றொரு போதை பொருள் 

(A) பாதிப்புகள் :

                              சார்பு நிலைக்கும், அறிவாற்றல் குறைபாடுகளுக்கும், மனநல பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

 5. பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்:

                               ஓபியாய்டுகள்( வலி நிவாரணிகள் ). பென் சோடியா செபைகள் ( மயக்க மருந்துகள் ) அல்லது சில உணர்வுகளை தூண்டுவதற்கு கொடுக்கப்படும் சில மருந்துகள், போன்ற பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சில குழந்தைகள் தவறாக பயன்படுத்தலாம்.

(A )பாதிப்புக்கள் :

6. தூண்டுதல்கள்( மத்திய  நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை தூண்டும் மருந்துகள் ):

             கோகேயின் அல்லது ஆம்பெ டமைன்கள் ள் போன்ற தூண்டுதல் ஏற்படுத்தக் கூடிய மருந்துகள் குழந்தைகளால் தவறாகப் பயன்படுத்தப்படலாம். இந்த மருந்துகள் இருதய பிரச்சினைகளுக்கும் போதைக்கும் அடிமையதால் உட்பட உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.


                  

            

Monday, 5 May 2025

பாலியல்சுரண்டலும் தீங்கிழைத்தாலும்

    குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் தீங்கிழைத்தல் ஆகியவை குழந்தைகளைப் பாலியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தும் மிகுந்த கவலைக்குரிய சட்ட விரோத செயல்பாடுகளாகும்.

    குழந்தைகளின் உடல்,உணர்வு மற்றும் உளவியல் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தீங்கை விளைவிக்கும். இது பல்வேறு விதமான தீங்கிழைத்தல்களை உள்ளடக்கியது.                         பின்வருவனவற்றுள் சில :

1. குழந்தைகளின் பாலியல் ரீதியான படங்கள்.

2. பாலியல் நோக்கத்துக்காக  குழந்தையைக் கடத்துதல்.

3. பாலியல் சுரண்டல் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்துவது

4. இணையவழி சுரண்டல்.

5. குழந்தைக்கு பாலியல் ரீதியாக  தீங்கிழைத்தல்

6. குழந்தையை பாலியலுக்குத் தயார்படுத்துதல்.

7. குழந்தை பாலியல் சுரண்டல் சாதனங்கள்.

    குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டலும் தீங்கிழைத்தல்களும் குற்றங்கள்.இவை மனித உரிமை மீறல்களும் கூட என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.        

      பாதிக்கப்படும் குழந்தைகள் அதனால் உடல் காயங்கள் உளவியல் வதை,பாலியல் வழியாகப் பரவும் தொற்றுக்கள், தேவையற்ற கர்ப்பம், சமூகத்தின் அவமதிப்பு, ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக் கொள்வதில் சிக்கல்கள் என கடுமையாகவும் நீண்ட காலத்துக்கு நீடிப்பவையுமான  விளைவுகளை எதிர்கொள்கின்றன.


Sunday, 4 May 2025

குழந்தைகள் மீதான உணர்வு ரீதியான தீங்கிழைத்தல்

 குழந்தைகள் மீதான உணர்வு ரீதியான தீங்கிழைத்தல் என்பது அவர்களின் உணர்வு ரீதியானதும் உளவியல் ரீதியானதுமான நல்வாழ்வை பாதிக்கும் வகையில் அவர்களை மோசமாக நடத்துதல் ஆகும்.

 இது பெற்றோர்களும் பாதுகாவலர்களும் ஒரு குழந்தையின் சுய கௌரவ உணர்வு,உணர்வு ரீதியான பாதுகாப்பு,ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றை பலவீனப்படுத்தும் நடத்தைகளிலும் செயல்பாடுகளிலும் ஈடுபடுவதை குறிக்கிறது.

1. தொடர்ச்சியான விமர்சனம் அல்லது அவமதிப்பு.

2. பழி சுமத்துதல்,பலிகடாவாக்குதல்.

3. நிராகரிப்பும் புறக்கணிப்போம்.

4. உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்.

5 உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருத்தல்.

6. மிரட்டல்களும் அச்சுறுத்தலும்.

 தனிமைப்படுத்துதலும் சமூக ரீதியான இழப்புக்கு உள்ளாக்குதலும் :

 ஒரு குழந்தை சமூக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுவதையும் தக்க வைப்பதையும் தடுத்தல் அவர்களை நண்பர்களிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்துதல் அவர்களின் சமூக உரையாடல்களை தடுத்தல் ஆகியவை குழந்தைகளிடம் தனித்து விடப்பட்ட உணர்வு சமூகப் பதற்றம் குறையுட்ப சமூக வளர்ச்சி ஆகியவற்றை விளைவிக்கும்

உளவியல் ரீதியான தீங்கிழைத்தல்

 குழந்தைகள் மீதான உளவியல் ரீதியான துன்புறுத்தல் என்பது ஒரு குழந்தையின் நலனில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அதனை உணர்வு அல்லது மன ரீதியாக தவறாக கையாளுதலை குறிக்கும்.

 ஒரு குழந்தையின் சுயமதிப்பு, தன்னம்பிக்கை, உளவியல் வளர்ச்சி ஆகியவற்றை பலவீனப்படுத்தும் நடத்தைகளையும் செயல்பாடுகளையும் இது உள்ளடக்குகிறது.

 உளவியல் ரீதியான துன்புறுத்தலின் சில எடுத்துக்காட்டுகள்.

1. வார்த்தை அல்லது உணர்வு ரீதியான இழிவுபடுத்துதல் 

2. நிராகரிப்பும் புறக்கணிப்பும்.

3. தொடர்ச்சியான விமர்சனம்.

4. தனிமைப்படுத்துதலும் அடைத்து வைத்தலும்.

5. தவறாக கையாளுதலும் சுரண்டலும்.

6. பயமுறுத்துதல் அல்லது மிரட்டுதல்.

7. அன்பையும் பாசத்தையும் தர மறுத்தல்.

           உளவியல் ரீதியான துன்புறுத்தல் என்பது ஒரு குழந்தையின் மன நலன், உணர்வு ரீதியான நல்வாழ்வு, ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றில் கடுமையான தீய விளைவுகளை ஏற்படுத்தும்.

                  தாழ்வான சுய கௌரவம், மன அழுத்தம், பதற்றம் சமூக ரீதியான பின்வாங்கல்,உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் சிக்கல்கள், நடத்த சார் பிரச்சனைகள்,கல்விசார் சிக்கல்கள் ஆகியவற்றோடு நீண்டகால உளவியல் சீறு விளைவுகளுக்கும் கூட வழிவகுக்கும்.

 தீர்வு முறைகள்:

                                ஒரு குழந்தை உளவியல் ரீதியான துன்புறுத்தலை எதிர்கொள்வதாக நீங்கள் சந்தேகித்தீர்கள் என்றால் உரிய குழந்தை பாதுகாப்பு அதிகாரிகளிடம் அது குறித்து புகார் அளிப்பது அல்லது ஆலோசகர்கள், மனநல மருத்துவர்கள், சமூகப் பணியாளர்கள் உள்ளிட்டவரிடமிருந்து தொழில் முறை ரீதியான உதவியை நாடுவது மிகவும் முக்கியம். 

குழந்தைகள் போதை மருந்துகளை சார்ந்து இருப்பது / அடிமையாவது.

இந்தியாவில் குழந்தைகள் போதை மருந்தை சார்ந்து இருப்பது என்பது சமீப காலங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு தீவிரமான பிரச்சனையாகும்.  இந...