Monday, 21 April 2025

இந்தியாவிலும்,தமிழ்நாட்டிலும் குழந்தைகளின் உரிமைகள்

 சுதந்திரத்திற்கு முன்பு:

 இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் குழந்தைகளின் உரிமைகளுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தும் வாதாடியும் வந்தனர். அவர்களுள் முக்கியமானவர்கள் சிலரை பற்றி பார்ப்போம்.

 மகாத்மா காந்தி:

                               குழந்தைகளுக்கு சுதந்திரம்,அன்பு,பராமரிப்புச் சூழல் ஆகியவை வழங்கப்பட வேண்டும். குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை, எந்த வடிவத்திலும் குழந்தைகள் சுரண்டப்படுவது ஆகிய கொடுமைகளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார்.

 முத்துலட்சுமி ரெட்டி:

                                        இந்தியாவின் முதல் பெண் சட்டசபை உறுப்பினர்  குழந்தை திருமணம் தேவதாசி முறைக்கு எதிராகவும் போராடினார்.

 பெரியார்:

                   கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் குழந்தை திருமணம்,ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டுக்கு எதிராகப் போராடினார்.

 அம்பேத்கர் :

                     பெண் குழந்தைகளின் உரிமைகளுக்காக அரசியல் சாசன சட்டத்தில் சிறப்பு சட்டப்பிரிவுகளையும், கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்தியதன் மூலம் குழந்தையின் உரிமைகளை அவர் நிலை நிறுத்தினார்.

 பண்டிட் ஈஸ்வர் சந்திர வித்யா சாகர் :

                                                                                   குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு திரட்டினார்.1856 ஆம் ஆண்டு விதவை மறுமண சட்டம் நிறைவேற்றப்பட்டதில் அவர் முக்கிய பங்காற்றினார் இது குழந்தை திருமண நடைமுறையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது.

 பாரதியார்:

                     கவிதைகள் மூலமாகவும் எழுத்துக்கள் மூலமாகவும் அவர் குழந்தைகளுக்ககான கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். குழந்தை திருமணத்தை கண்டித்தார்.    

 அன்னிபெசன்ட் :

                                 சென்னையில் சென்ட்ரல் இந்து பள்ளியை நிறுவி அப்பகுதியில் கல்வி மற்றும் குழந்தை உரிமைகளை மேம்படுத்துவதற்காக பணியாற்றினார்.

 ராஜாராம் மோகன் ராய் :

                                       குழந்தை திருமணத்தை ஒழிக்க பாடுபட்டார்.

 சாவித்ரி பாய் பூலே :

                                    19ஆம் நூற்றாண்டில் குழந்தைகளின் உரிமைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.

 இந்த சீர்திருத்தவாதிகள் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக போராடுவதிலும் முக்கிய பங்காற்றினர் 

                                                                        



1 comment:

  1. அற்புதமானத் தகவல்.வாழ்த்துக்கள்

    ReplyDelete

குழந்தைகள் போதை மருந்துகளை சார்ந்து இருப்பது / அடிமையாவது.

இந்தியாவில் குழந்தைகள் போதை மருந்தை சார்ந்து இருப்பது என்பது சமீப காலங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு தீவிரமான பிரச்சனையாகும்.  இந...