Wednesday, 30 April 2025

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தமிழ்நாட்டில் பல்வேறு வடிவங்களும் போக்குகளும்

 உடல்ரீதியான வன்முறை:

    1.உடல்ரீதியான வன்முறையின் வடிவங்கள் :

                       அடித்தல், அறைதல், மிதித்தல், குத்துதல்,உலுக்குதல், சவுக்கால் அடித்தல்,  

2. உடல் ரீதியான வன்முறையின் இடங்கள் :

                  வீடு, பள்ளி,நிறுவனங்கள், சமூகம்.

3. விளைவுகளும் தாக்கமும்:

                                                       உடலில் காயங்கள்,வலி, துன்புறுத்தல், அதோடு உணர்வு ரிதியான, உளவியல் ரீதியான வேதனை ஆகியவற்றை விளைவிக்க கூடும்.

 4.உடல் ரீதியான வன்முறைக்குப் பங்களிக்கும் காரணிகள்:

                                                   தலைமுறைகளாகத் தொடரும் வன்முறை வடிவங்கள், உடல்சார் தண்டனையை மன்னிக்கும் பண்பாட்டு நம்பிக்கைகள்,குழந்தை வளர்ப்பு திறன்களின் போதாமை, குடும்பத்துக்குள் நிலவும் அழுத்தங்கள், போதைப் பொருள் பயன்பாடு வன்முறைக்கான சமூக ரீதியான ஏற்பு.

 5.சட்ட ரீதியானதும் பாதுகாப்புக்கானதுமான நடவடிக்கைகள் :

 இந்தியாவில் சிறார் நீதி சட்டம் 2015, குழந்தைகளை உடல் சார்ந்து தண்டிப்பதையும் உடல் ரீதியான துன்புறுத்தலையும் தடை செய்கின்றது. இந்தச் சட்டங்கள் அமலாக்கமும் இவை குறித்த விழிப்புணர்வும் இடங்களுக்கேற்ப வேறுபடலாம். குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்புக்களுக்கு வலுவூட்டி வன்முறையை நிகழ்த்தியவர்கள் அதற்கு பதில் அளிப்பதை உறுதி செய்வதற்கான தொடர் முயற்சிகள் தேவைப்படுகின்றன.


                                                 


             

Monday, 21 April 2025

இந்தியாவிலும்,தமிழ்நாட்டிலும் குழந்தைகளின் உரிமைகள்

 சுதந்திரத்திற்கு முன்பு:

 இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் குழந்தைகளின் உரிமைகளுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தும் வாதாடியும் வந்தனர். அவர்களுள் முக்கியமானவர்கள் சிலரை பற்றி பார்ப்போம்.

 மகாத்மா காந்தி:

                               குழந்தைகளுக்கு சுதந்திரம்,அன்பு,பராமரிப்புச் சூழல் ஆகியவை வழங்கப்பட வேண்டும். குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை, எந்த வடிவத்திலும் குழந்தைகள் சுரண்டப்படுவது ஆகிய கொடுமைகளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார்.

 முத்துலட்சுமி ரெட்டி:

                                        இந்தியாவின் முதல் பெண் சட்டசபை உறுப்பினர்  குழந்தை திருமணம் தேவதாசி முறைக்கு எதிராகவும் போராடினார்.

 பெரியார்:

                   கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் குழந்தை திருமணம்,ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டுக்கு எதிராகப் போராடினார்.

 அம்பேத்கர் :

                     பெண் குழந்தைகளின் உரிமைகளுக்காக அரசியல் சாசன சட்டத்தில் சிறப்பு சட்டப்பிரிவுகளையும், கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்தியதன் மூலம் குழந்தையின் உரிமைகளை அவர் நிலை நிறுத்தினார்.

 பண்டிட் ஈஸ்வர் சந்திர வித்யா சாகர் :

                                                                                   குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு திரட்டினார்.1856 ஆம் ஆண்டு விதவை மறுமண சட்டம் நிறைவேற்றப்பட்டதில் அவர் முக்கிய பங்காற்றினார் இது குழந்தை திருமண நடைமுறையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது.

 பாரதியார்:

                     கவிதைகள் மூலமாகவும் எழுத்துக்கள் மூலமாகவும் அவர் குழந்தைகளுக்ககான கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். குழந்தை திருமணத்தை கண்டித்தார்.    

 அன்னிபெசன்ட் :

                                 சென்னையில் சென்ட்ரல் இந்து பள்ளியை நிறுவி அப்பகுதியில் கல்வி மற்றும் குழந்தை உரிமைகளை மேம்படுத்துவதற்காக பணியாற்றினார்.

 ராஜாராம் மோகன் ராய் :

                                       குழந்தை திருமணத்தை ஒழிக்க பாடுபட்டார்.

 சாவித்ரி பாய் பூலே :

                                    19ஆம் நூற்றாண்டில் குழந்தைகளின் உரிமைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.

 இந்த சீர்திருத்தவாதிகள் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக போராடுவதிலும் முக்கிய பங்காற்றினர் 

                                                                        



Saturday, 19 April 2025

குழந்தை உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை உடன்படிக்கை

 குழந்தையின் உள்ளார்ந்த உரிமைகள்

 41 சட்ட கூறுகள் உள்ளன.


1. குழந்தை என்றால் யார்?


2. பாகுபாடின்மை.


3. குழந்தையின் சிறந்த நலன்.


4. உரிமைகளை         நடைமுறைப்படுத்துவது.


5.பெற்றோரின் வழிகாட்டுதலும் குழந்தையின் வளரும் திறன்களும்.


6.உயிர் வாழ்வதும் வளர்ச்சியும்.


 7.பெயரும் தேசிய அடையாளமும்.


8. அடையாளத்தை பாதுகாத்தல்.


9. பெற்றோர்களிடமிருந்து பிரிந்து இருப்பது.


10. பிரிந்த குடும்பம் மீண்டும் இணைவது.


11. சட்ட விரோத பரிமாற்றமும் திரும்பப் பெறாததும்.


12. குழந்தையின் கருத்து.


13. பேச்சு சுதந்திரம்.


14. சிந்திக்க தான் நம்புவதை பின்பற்றி நடக்க விரும்பிய மதத்தை பின்பற்ற சுதந்திரம்.


15. ஒரு குழுவாக /சங்கம் அமைக்க சுதந்திரம்.


16.தனி உரிமை பாதுகாப்பு.


17.வயதுக்கு உரிய தகவலைப் பெறுதல்.


18.பெற்றோர்களின் கடமைகள்.


19. தீங்கிழைத்தளிலிருந்தும் புறக்கணிப்பிலிருந்தும் பாதுகாத்தல்.


20. குடும்பங்கள் இல்லாத குழந்தைகளின் பாதுகாப்பு.


21. தத்தெடுப்பு.


22. அகதிக் குழந்தைகள்.


23. மாற்றுத் திறனாளிக் குழந்தைகள்.


24. சுகாதாரமும் சுகாதார சேவைகளும்.


25. தங்க வைக்கப்படும் இடம் பற்றி அவ்வப்போது பரிசீலனை செய்வது.


26. சமூகப் பாதுகாப்பு.


27. வாழ்க்கைத் தரம்.


28. கல்வி.


29. கல்வியின் இலக்குகள்.


30. சிறுபான்மையின குழந்தைகள் அல்லது பழங்குடி மக்கள்.


31.ஓய்வு,பொழுதுபோக்கு,பண்பாட்டுசெயல்பாடுகள்.


32. குழந்தைத் தொழிலாளர் முறை.


33. போதைப் பொருள் பயன்படுத்துதல்.


34. பாலியல் சுரண்டல்.


35. விற்பனை,உழைப்பு /பாலியல் சுரண்டல் /உறுப்புகளை எடுப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக குழந்தையை கடத்துவது (trafficking), குழந்தையை கடத்தி பணம் கேட்டு மிரட்டுதல் (abduction).


36. பிற வடிவங்களிலான சுரண்டல்.


37. சித்ரவதையும் சுதந்திரம் மறுக்கப்படுவதும்.


38. ஆயுத மோதல்கள் / போர்.


39. மறுவாழ்வுக்கான பராமரிப்பு.


40. இளம் சிறார் நீதி நிர்வாகம்.


41. நடைமுறையில் இருக்கும் தரநிலைகளுக்கு மதிப்பளிப்பது.


 மேற்கண்ட சட்ட கூறுகள் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தை உரிமைகளுக்கான உடன்படிக்கையில் இடம் பெற்றுள்ளது.












Friday, 18 April 2025

'குழந்தை உரிமைகள்' என்கிற கருத்தாக்கம்

குழந்தை என்றால் யார்?

 குழந்தை என்றால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு குறைவாக இருக்கிற அல்லது வயது வந்தோர் என்ற கருதத்தக்க வயதை இன்னமும் அடையாத ஒரு இளம் மனிதர் (இளைஞர்) என்பது பொதுவான வரையறை.


 ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையின் படி, 18 வயதிற்கு உட்பட்ட எந்த ஒரு தனிநபரும் குழந்தை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.


 வரலாற்று ரீதியாக குழந்தைகள் நடத்தப்படும் முறை:

 பண்டைய நாகரிகங்கள் எப்போதும் குழந்தைகளை சமூகத்தின் மதிப்புமிக்கஉறுப்பினர்களாகவும் எதிர்காலத்துக்கு பங்களிப்பவர்களாகவும் பார்த்தன.  


(உதாரணத்திற்கு), பண்டைய ரோமாபுரியில்,குழந்தைகள் அவர்களின் அப்பாக்களின் சொத்தாக கருதப்பட்டனர், அவர்களின் நலன் குடும்பத்தின் முதன்மை பொறுப்பாக இருந்தது.                                    

பண்டைய கிரேக்க நாகரிகத்தில்,கல்வியும் உடற்பயிற்சியும் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் மிக முக்கியமானதாகவும் மதிப்பு வாய்ந்ததாகவும் கருதப்பட்டது.


 ஐரோப்பாவில் இடைக்காலத்தில், குழந்தைகள் பொதுவாக குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு  பங்களிப்பார்கள் என்று   எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் பெரியவர்களின் சிறிய நகல்களாக பார்க்கப்பட்டனர். அவர்கள் பெரும்பாலும் சிறு வயதிலிருந்தே வேலை செய்ய வேண்டியது இருந்தது. பெரியவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு அல்லது உரிமைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை.


'குழந்தை உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை' 1989 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. வாழ்வதற்கான உரிமை,ஆரோக்கியமாக வாழ்வதற்கான உரிமை,கல்வி உரிமை,  தீங்கிழைத்தலுக்கும் சுரண்டப்படுவதற்கும் ஆட்படாமல் இருப்பதற்கான உரிமை உள்ளிட்ட குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகளை கோடிட்டுக்காட்டியது.


 குழந்தைகள் பற்றிய புரிதல்களும்   புனைவுகளும் :

 குழந்தைகள் தொடர்புடைய பொதுவான சில பார்வைகளும் கட்டுக்கதைகளும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


1. குழந்தைகள் ஏதும் அறியாதவர்கள்.


2. குழந்தைகள் எளிதில் நொறுங்கி போவார்கள்.


3. குழந்தைகள் வெள்ளை பேப்பர்கள்.


4. குழந்தைகள் இயல்பாகவே கீழ்ப்படிந்து நடப்பார்கள்.


5. எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள்.


6. குழந்தைகள் பெரியவர்களின் அன்பை தவறாக பயன்படுத்துபவர்கள்.


7. பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கான ஒட்டுமொத்த பொறுப்பாளர்கள்.


 மேலே சொன்ன உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் விமர்சனம் மனப்பான்மையுடன் அணுக வேண்டும்.


 

குழந்தைகள் போதை மருந்துகளை சார்ந்து இருப்பது / அடிமையாவது.

இந்தியாவில் குழந்தைகள் போதை மருந்தை சார்ந்து இருப்பது என்பது சமீப காலங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு தீவிரமான பிரச்சனையாகும்.  இந...